Monday, December 19, 2011

புதிய அணை கேரள முதல்வர் உறுதி




















முல்லைப்பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்டுவதன் மூலம் இரு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றும், இதன் மூலம் இரு மாநிலத்திற்கும் வெற்றி கிடைக்கும் எனவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

மேலும் அவர் புதிய அணை கட்டுவதன் மூலம் கேரள மாநில மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க முடியும். தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியும். இதன் மூலம் இரு மாநிலங்களுக்கும் வெற்றி கிடைக்கும் என கேரள மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்.