Thursday, January 29, 2009
சொடக்கு போடும் சுண்டெலிகள் எரிச்சல் படும் இளைய தளபதி
‘பிரச்சனை பின்னாலேயே வரும். வினை வேலி தாண்டியும் வரும்’ என்பதற்கு இதைவிட ஒரு உதாரணத்தை காட்ட முடியாது. ஏற்கனவே வில்லு குறித்து வரும் கமெண்டுகள், விஜயை ஏகத்திற்கும் டென்ஷன் ஆக்கியிருக்கிறது. இந்த லட்சணத்தில், இந்து கடவுள்களை விஜய் அவமதிக்கிறார் என்று இன்னொரு குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார்கள் இந்துத்வா அமைப்பினர்.
வில்லு பிரமோஷனுக்காக ஒவ்வொரு மாவட்டமாக சுற்றி தியேட்டர் தியேட்டராக ரவுண்ட் அடிக்கிறார் விஜய். இவரை வரவேற்பதற்காக அடிக்கும் போஸ்டர்களில், கண்ணே, கருணையே, கடவுளே…என்றெல்லாம் வாசகத்தை போட்டு அன்பை தெரிவிக்கிறார்கள் ரசிகர்கள். அதில் சில போஸ்டர்களில் நிஜமாகவே இவரை கடவுளாக டிசைன் பண்ணியிருப்பதுதான் பிரச்சனையை கிளப்பியிருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஐயப்பன் உருவத்தில் இவரை டிசைன் பண்ணியிருந்தார்கள். அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது, இன்னும் பல கடவுள்களின் உருவத்தோடு விஜயை மேட்ச் பண்ணிவிட்டார்களாம். ரசிகர்களின் இந்த அன்புத் தொல்லை தனக்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருவதால், இனி போஸ்டர்களையும் தலைமை மன்றத்திடம் காண்பித்து ‘நோ அப்ஜெக்ஷன்’ சர்டிபிகேட் வாங்க சொல்லலாமா என்று யோசிக்கிறாராம் இளைய தளபதி.
பிள்ளையாரு சும்மா இருந்தாலும் சுண்டெலி ‘சொடக்கு’ போட்டா என்ன செய்வது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment