Thursday, January 29, 2009

ஷாரூக் கானுக்கு ஆபரேஷன்




















பாலிவுட் நடிகர் ஷாரூக் கானுக்கு ‌தோள்பட்டையில் எலும்பு தேய்வு ஏற்பட்டுள்ளதால் ஆபரேஷன் செய்யுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர். நடிகர் ஷாரூக் கான் தற்போது துல்ஹா மில் கயா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங்கில் பங்கேற்ற ஷாரூக் கானுக்கு தோள்ப‌ட்டையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவனைக்கு சிகிச்சைக்கா சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தோள்பட்டை எலும்பு தேய்ந்து இருப்பதாகவும், உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து எப்போது ஆபரேஷன் செய்து கொள்வது என்பது குறித்து ஷாரூக் யோசித்து வருகிறார். இதற்கிடையில் தான் தயாரித்து வரும் பில்லு பார்பர் (தமிழில் வெளியான குசேலன் படத்தின் இந்தி ரீமேக் ) படப்பணிகளை முடித்த பின்னர் ஷாரூக் ஆபரேஷன் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் முதுகு வலி மற்றும் மூட்டு வலிக்காக ஆபரேஷன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: